என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்குங்கள்- மத்திய மந்திரிக்கு டி.ஆர்.பாலு கடிதம் 22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்குங்கள்- மத்திய மந்திரிக்கு டி.ஆர்.பாலு கடிதம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/12/1834824-trbaalu.webp)
X
22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்குங்கள்- மத்திய மந்திரிக்கு டி.ஆர்.பாலு கடிதம்
By
மாலை மலர்12 Feb 2023 8:49 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
- 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
புதுடெல்லி:
காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயலை மறுநாள் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் டி.ஆர்.பாலு, மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு அது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
Next Story
×
X