search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மம்தா பானர்ஜி
    X

    நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான நிலை: மம்தா பானர்ஜி

    • மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
    • ஏழு மாநிலங்களில் 13 தொகுதிகளில் 10-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.

    ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேரத்ல் நடைபெற்றது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

    மேற்கு வங்காளத்தில் நான்கு தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகள் பாஜக-விடம் இருந்தது. இந்த நான்கு தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக நிலை உள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில் "நாடு முழுவதும் பாஜவுக்கு எதிரான நிலை உள்ளது. மத்திய பிரதேசத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு சாதகமான முடிவு இல்லை. மக்களவை தேர்தலில் பாஜக முழு மெஜாரிட்டி பெறவில்லை.

    மக்கள் முடிவு அவர்களுக்கு எதிராக உள்ளது. இதனால் தற்போது மீண்டும் ஏஜென்ஸி ராஜ்ஜியத்தை கையில் எடுத்துள்ளனர். இடைத்தேர்தல் முடிவு மக்களின் வெற்றி. இந்த வெற்றி, மக்கள் மீதான சமூகப் பொறுப்புக்கான கட்சியின் அர்ப்பணிப்பைப் புதுப்பிக்கும்" என்றார்.

    Next Story
    ×