என் மலர்
இந்தியா
உ.பி.யில் இந்து பெண்ணை மதம் மாற்ற முயற்சி: வீடு புகுந்து சிலைகளை சேதப்படுத்தியதாக புகார்
- கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக இந்து பெண் புகார் அளித்துள்ளார்.
- நகாசா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பல்:
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், திருமணமான இந்து பெண்ணை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளியின் 2 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியைகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத மதமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரெண்டு சக்ரேஷ் மிஸ்ரா கூறியதாவது:-
இரண்டு ஆசிரியைகள் வீடு புகுந்து இந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தியதுடன், கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக இந்து பெண் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நகாசா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகளையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகார் கூறிய இந்து பெண்ணின் கணவர் கிறிஸ்தவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.