என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/01/1754687-kash.gif)
X
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை
By
மாலை மலர்1 Sept 2022 6:35 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.
- சோபோரில் பாதுகாப்புப் படை நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.
விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
Next Story
×
X