search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் பினராயி விஜயனை சந்தித்த நிர்மலா சீதாராமன்
    X

    டெல்லியில் பினராயி விஜயனை சந்தித்த நிர்மலா சீதாராமன்

    • டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் பினராயி விஜயனை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
    • இந்த சந்திப்பின்போது கேரள மாநில ஆளுநர் உடனிருந்தார்.

    டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார்.

    கேரளா அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் சுமூகமான உறவு கிடையாது. வயநாடு நிலச்சரிவு மறுசீரமைப்பிற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என பினராயி அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    இந்த சந்திப்பின்போது கேரள மாநில அரசுக்கு போதுமான நிதியை ஒதுக்க பினராயி விஜயன் வலியுறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான உரையாடல் சிறப்பானதாக அமைந்தது என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பின்போது கேரள மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில அரசின் டெல்லிக்கான பிரதிநிதி கே.வி. தாமஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கேரளாவில் அடுத்த வருடம் தேர்தல் வரவிருக்கும் நிலையில் எல்.டி.எஃப்., பாஜக இடையே மறைமுக புரிதல் இருப்பதாக கேரள மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

    Next Story
    ×