என் மலர்
இந்தியா
தற்சார்பு இந்திய வேலை வாய்ப்பு திட்டத்தில் 59.54 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்- மத்திய அரசு தகவல்
- கொரோனா தொற்று காலத்தில் வேலையை இழந்தவர்களுக்கு இந்த திட்டம் தொடங்கப் பட்டது.
- மொத்தம் 75.11 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி, தெரிவித்துள்ளதாவது:
கொரோனா தொற்று காலத்தில் வேலையை இழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், ஊக்கத்தொகை அளிப்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தற்சார்பு இந்திய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனத்தில் மாதம் ரு.15,000-க்கு கீழே ஊதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்படி பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
இத்திட்டத்தின்கீழ் 13.07.2022-ன்படி, நாடு முழுவதும் 59.54 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மொத்தம் 75.11 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் பதிவு செய்துகொள்வதற்கான காலம் 30.06.2021-லிருந்து 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.