என் மலர்
இந்தியா

தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒத்துழைக்கும்: அமித் ஷா பதில்

- இந்திய அரசமைப்பின் 11-வது சட்டப்பிரிவு பாராளுமன்றத்திற்குத்தான் முழு அதிகாரம் வழங்குகிறது.
- இது மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசை சார்ந்தது அல்ல.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநில அரசுகள் அமல்படுத்தமாட்டோம் என தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேட்டி அளித்தார். அப்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அரசமைப்பின் 11-வது சட்டப்பிரிவு குடியுரிமை தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. இது மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசை சார்ந்தது அல்ல. தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பாளர்கள் என்று நினைக்கிறேன். திருப்பதிப்படுத்தும் அரசியலுக்கான அவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அமித் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் இந்த சட்டம் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு அமித் ஷா கூறியதாவது:-
இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். சிஏஏ பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. சிஏஏ-வை திரும்பப் பெறுவது நடக்காத விசயம். இது முழுக்க முழுக்க அரசமைப்பு ரீதியாக செல்லும்படியாகும் சட்டம்.
இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. சிஏஏ-வை அமல்படுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என உத்தவ் தாக்கரேயிடம் கேட்க விரும்புகிறேன். சிறுபான்மையினர் வாக்குகளுக்கான அவர் திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.