என் மலர்
இந்தியா
X
என்னையா குரைக்கிறாய்..? ஆத்திரத்தில் நாயை அடித்துக்கொன்ற நபர்
Byமாலை மலர்17 Oct 2022 11:07 AM IST
- சிசிடிவி பதிவை கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
- நாயை செங்கல்லால் அடித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கான்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தெருநாயை அடித்துக் கொன்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி என்ற நபர் சாலையில் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்து தெருநாய் தொடர்ந்து குரைத்து பயமுறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், செங்கல்லை நாயின் தலையில் போட்டு கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனை கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாக்கியை கைது செய்தனர். அவர் நாயை அடித்துக்கொல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story
×
X