search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கன்னங் கிழிபட நேரும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் - வைகோ
    X

    கன்னங் கிழிபட நேரும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் - வைகோ

    • பாராளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது.
    • நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்.

    ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று மாநிலங்களவையில் வைகோ பேசினார்.

    மாநிலங்களவையில் தொடர்ந்து எம்.பி. வைகோ பேசியதாவது:

    நான் பேசியதில் எந்த அன் பார்லிமெண்ட்ரி வார்த்தை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய வைகோ திடீரென,

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

    மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

    எம்பக்கம் புகுந்து வந்துவிடும் இந்தி

    எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?

    கன்னங் கிழிபட நேரும்

    கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்

    என முழங்கினார்.

    இந்த பாராளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குப்பைத் தொட்டியில்தான் தூக்கி வீச வேண்டும் . புதிய கல்விக்கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

    நான் வைகோ. என்னை பேசக்கூடாது என சொல்ல நீங்கள் யார்? நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன். நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்தி மொழியை ஏற்காத, புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது.

    இவ்வாறு வைகோ பேசினார்.

    Next Story
    ×