என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக திகழ்கிறது இந்தியா- குடியரசு துணைத் தலைவர் பெருமிதம் சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக திகழ்கிறது இந்தியா- குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/27/1768693-jagadeep-thankar.jpg)
X
ஜெகதீப் தன்கர்
சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக திகழ்கிறது இந்தியா- குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
By
மாலை மலர்28 Sept 2022 4:30 AM IST (Updated: 28 Sept 2022 4:30 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியா முக்கிய பங்களிப்பு.
- ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகா உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-19ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதுகளை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வழங்கினார். இந்திய சுற்றுலா புள்ளியியல் 2022 என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச அளவிலான மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியாவின் பங்களிப்பு தனிசிறப்பு வாய்ந்தது. நமது பழமையான சிகிச்சை முறையான ஆயுர்வேதம் மற்றும் யோகா, உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.
சுற்றுலாவுக்கான சொர்க்கமாக இந்தியா உள்ளது. சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா தளங்களை இந்திய சுற்றுலாப் பயணிகள் காணவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
X