என் மலர்
இந்தியா
VIDEO: பற்றி எரியும் காரில் சிக்கிய புது மாப்பிள்ளை.. பத்திரிகை கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்
- இவருக்கு பிப்ரவரி 14ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
- மதியம் சென்ற அனில் மாலையாகியும் திரும்பி வரவில்லை
டெல்லியில் தனது திருமணத்துக்காக பத்திரிகை கொடுக்க சென்ற நபர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி- மீரட் விரைவு சாலையில் காசிபூர் அருகே நேற்று இரவு கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
இறந்த இளைஞர் கிரேட்டர் நொய்டாவின் நவாடாவில் வசிக்கும் அனில். இவருக்கு பிப்ரவரி 14ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
மதியம் சென்ற அனில் மாலையாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் கவலையடைந்ததாக அனிலின் மூத்த சகோதரர் சுமித் தெரிவித்தார். நாங்கள் அவரை அழைக்க முயற்சித்தோம், ஆனால் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.
இரவு 11-11:30 மணியளவில், விபத்து குறித்து போலீசார் எங்களுக்குத் தெரிவித்தனர், மேலும் அனில் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினர் என்று சகோதரர் சுமித் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனில் தீக்காயங்கள் காரணமாக உயிரிழநதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
VIDEO | Car catches fire on Delhi-Meerut expressway near Ghazipur. More details awaited. (Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/pV1yCMLGcl
— Press Trust of India (@PTI_News) January 17, 2025
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.