என் மலர்
இந்தியா
VIDEO: காதலனுடன் காரில் சென்ற மனைவி.. பல கிலோமீட்டர் பானட்டில் தொங்கிய கணவன்
- ஹூண்டாய் ஆரா காரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கணவன் இழுத்துச் செல்லப்பட்டார்.
- புகாரின் பேரில் மஹிர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
காருக்குள் மனைவியும் அவரது காதலனும் அமர்ந்திருக்க கணவன் பானட்டில் தொங்கியபடி பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஒரு பரபரப்பான சாலையில் வேகமாகச் சென்ற ஹூண்டாய் ஆரா காரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கணவன் இழுத்துச் செல்லப்பட்டார்.
பானட்டில் தொங்கிய நிலையில் பயணித்தவர் சமீர். மஹிர் என்ற நபர் தனது மனைவியை தனது காரில் எங்கோ அழைத்துச் செல்ல முயன்றார் என்றும் இதுபற்றி அறிந்ததும் காரை நிறுத்த முயன்று பானட்டில் ஏறியதாகவும் சமீர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மஹிர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்த தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீரின் மனைவியும் மஹிரும் காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Man Dragged for Kilometres on Car Bonnet after a Minor Dispute in Moradabad UP pic.twitter.com/eDdbyu52WW
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 16, 2025