என் மலர்
இந்தியா
விராட் கோலி எனது கேப்டன்சியின் கீழ் விளையாடினார்- தேஜஸ்வி யாதவ்
- விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா?
- எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது.
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி எனது கேப்டன்சியின் கீழ் கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்று பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு பேசியுள்ளார்.
ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய தேஜஸ்வி யாதவ், "நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா? நான் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறேன். எனது இரண்டு தசைநார்களில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது" என்று தெரிவித்தார்.
தேஜஸ்வி யாதவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலியும் தேஜஸ்வி யாதவும் ஜூனியர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பல ஆட்டங்களில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"Virat Kohli player under my captaincy" ~ Tejashwi Yadavpic.twitter.com/MKjePwSRxh
— Cricketopia (@CricketopiaCom) September 14, 2024