என் மலர்
இந்தியா
பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு
- மேற்கு வங்காளம் சென்ற பிரதமர் மோடி ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- பிரதமர் மோடியை மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.
கொல்கத்தா:
பிரதமர் மோடி மாநில வாரியாக சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இதன்மூலம் மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ஜனாதிபதி அல்லது பிரதமர் யார் வந்தாலும் அவர்களை மாநில முதல் மந்திரி சந்திப்பது வழக்கம். எனவே இது ஒரு சம்பிரதாய சந்திப்பு. இந்த சந்திப்பில் எந்த அரசியலும் பேச நான் வரவில்லை. ஏனெனில் இது அரசியல் சந்திப்பு இல்லை என தெரிவித்தார்.