என் மலர்
இந்தியா
செல்லப்பிராணிக்காக லண்டன் பயணத்தை ரத்தன் டாடா ரத்து செய்தார்: நினைவுகூர்ந்த நிரஞ்சன் ஹிரானந்தானி
- லண்டனில் நடைபெற இருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இருந்தார்.
- கடைசி நேரத்தில் லண்டன் பயணத்தை ரத்து செய்யததால், ரத்தன் டாடாவிற்கு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவர் சிறந்த தொழில் அதிபராக இருந்தது மட்டுமல்லாமல் சிறந்த மனிதாபிமானமிக்கவராக திகழ்ந்தார். அனுதாபம், கருணை உள்ளம் கொண்டனர்.
செல்லப் பிராணிகள் மீது கனிவு காட்டக்கூடியவர். தெருநாய்களை பாதுகாக்க இளைஞர் கொண்ட முயற்சியை பாராட்டும் வகையில், சாந்தனு நாயுடு என்ற அந்த இளைஞரை தனது உதவியாளராக வைத்துக் கொண்டவர்.
ரத்தன் டாடா உடனான தங்களுடைய சந்திப்புகள் குறித்து தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழில் அதிபர் நிரஞ்சன் ஹிரானந்தானி, செல்லப் பிராணிக்காக ரத்தன் டாடா தனது லண்டன் பயணத்தை ரத்து செய்தார் என நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நிரஞ்சன் ஹிரானந்தானி கூறியதாவது:-
ரத்தன் டாடா அவர்கள் விருது ஒன்றை பெறுவதற்காக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. அது என்ன விருது என்பதை என்னால் நினைவு கொள்ள முடியவிலலை. ஆனால், கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார்.
தன்னுடைய பயணத்தை ரத்து செய்ததால் ரத்தன் டாடாவிற்கு என்ன ஆனது. உடல்நிலை சரியில்லையா?... அவருக்கு என்ன நிகழ்ந்தது எனக் கேட்க ஆரம்பித்தனர். கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ய காரணம் என்ன? என கேள்வி எழும்பியது. பின்னர்தான் அவரது செல்லப்பிராணியான நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தெரியவந்தது.
நாய் மீது அக்கறை எடுத்துக் கொண்டு தனது லண்டன் பயணத்தை ரத்து செய்தார். அவரது அருகில் நாயை படுக்க வைத்து பார்த்துக் கொண்டார். செல்லப் பிராணிகள் மீதான் அன்பு மற்றும் எளிமையானவர் என்பது இது ஒரு எடுத்துக்காட்டு. எல்லோரும் கற்றுக் கொள்ள இது ஒரு பாடம். இந்த நினைவுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.
இவ்வாறு நிரஞ்சன் தெரிவித்தார்.