search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மம்தா பானர்ஜியின் பதில்...
    X

    உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மம்தா பானர்ஜியின் பதில்...

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டு குடும்பம். முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.
    • மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும்.

    மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். இவரது உறவினர் (nephew) அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அக்கட்சியில் மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மீடியா ஒன்று மம்தா பானர்ஜியிடம், உங்களுடைய அரசியல் வாரிசு யார்? எனக் கேள்வி எழுப்பியது.

    இதற்கு மம்தா பானர்ஜி பதில் அளித்து கூறியதாவது:-

    மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும். நாங்கள் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், பூத் பணியாளர்களை கொண்டுள்ளோம். இது ஒரு கூட்டு முயற்சியாகும். கட்சியில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். இன்று புதிதாக வருபவர்கள் நாளை மூத்த தலைவர்கள் ஆவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு ஒழுக்கமான கட்சி. எந்தவொரு தனிநபரும் விதிமுறைகளை வகுக்க உத்தரவிட முடியாது.

    நான் என்பது கட்சியல்ல. நாங்கள்தான் கட்சி. இது ஒரு கூட்டு குடும்பம், மற்றும் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.

    Next Story
    ×