என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![இன்று மீண்டும் முயற்சி செய்வோம்: விவசாயிகள் இன்று மீண்டும் முயற்சி செய்வோம்: விவசாயிகள்](https://media.maalaimalar.com/h-upload/2024/02/14/2009034-farmers1402.webp)
இன்று மீண்டும் முயற்சி செய்வோம்: விவசாயிகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எல்லையில் கூடிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு.
- நேற்று பேரணியை நிறுத்திய விவசாயிகள் இன்று டெல்லிக்குள் நுழைய முயற்சிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி நேற்று பஞ்சாப், அரியானா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியை தொடங்கினர். ஆனால், 2020-21-ல் நடந்ததை போன்று நடந்து விடக்கூடாது என்பதால் பஞ்சாப், அரியானா எல்லையில் டெல்லி போலீசார் கடுமையான தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
பேரணிக்கு புறப்பட்ட விவசாயிகள் எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் விவசாயிகளை கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டி அடித்தனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியதும் விவசாயிகள் கலைந்து ஓடினர்.
அத்துடன நேற்றைய பேரணி நிறுத்தப்படுவதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. இந்த நிலையில் இன்று டெல்லி நோக்கி புறப்படுவோம். டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாத உணவு பொருட்கள் மற்றும் டீசல் ஆகியவற்றுடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பேரணி ஒன்றிரண்டு நாட்களில் முடிவடைய வாய்ப்பு இல்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை திரும்பமாட்டோம் என அறிவித்துள்ளர்.
கடந்த முறை 13 மாதங்கள் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.