என் மலர்
இந்தியா
மகா கும்பமேளாவில் வைரலான மேக்கப் பெண்- வீடியோ
- ஒருவர் தனது மனைவியின் மேக்கப் பையை ஒரு கையில் வைத்திருக்கிறார்.
- வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. இதையொட்டி யமுனை ஆற்றில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் கும்ப மேளாவுக்கு வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாசி மாலை விற்கும் பெண் தனது காந்த கண்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தார். இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கும்ப மேளாவுக்கு கணவருடன் வந்த ஒரு பெண் கூட்டத்தினரின் மத்தியில் மேக்கப் செய்யும் காட்சிகள் உள்ளது.
அந்த வீடியோவில், ஒருவர் தனது மனைவியின் மேக்கப் பையை ஒரு கையில் வைத்திருக்கிறார். மற்றொரு கையில் கண்ணாடியை பிடித்திருக்கிறார். இந்த தம்பதியை சுற்றிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அப்போது அந்த பெண் கணவர் பிடித்திருக்கும் கண்ணாடியை பார்த்து தனது முகத்துக்கு மேக்கப் செய்கிறார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.