என் மலர்
இந்தியா
பாராகிளைடிங்கில் பறந்தபோது விபரீதம்- கயிறு அறுந்து சுற்றுலா பயணி உள்பட இருவர் உயிரிழப்பு
- பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது.
- நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 27 வயதான சுற்றுலாப் பயணி ஷிவானி டேபிள் என்பவர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்கு வானில் பறக்கும் பாராகிளைடரில் பறக்க திட்டமிட்டு, வடக்கு கோவாவில் உள்ள பாராகிளைடிங் நிறுவனத்தை தொடர்புக் கொண்டார்.
அதன்மூலம், நேற்று மாலை ஷிவானி டேபிள் என்பவர் பயிற்சியாளர் சுமல் (26) என்பவருடன் பாராகிளைடரில் பறந்தார். ஆனால், அவர்கள் பறந்த சிறிது நேரத்திலேயே கேரி என்கிற கிராமம் அருகே கயிறு அறுந்து பள்ளத்தாக்கில் விழுந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.
மேலும், விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், " பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அந்நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய் சன்ஹிதாவின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.