search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வந்தே பாரத் ரெயில்களில் பயணத்தின்போது உணவு பெறலாம்- ரெயில்வே வாரியம் அறிவிப்பு
    X

    வந்தே பாரத் ரெயில்களில் பயணத்தின்போது உணவு பெறலாம்- ரெயில்வே வாரியம் அறிவிப்பு

    • உணவு அளிக்க இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) ஊழியர்கள் மறுத்து விடுகின்றனர்.
    • இரவு 9 மணிக்கு மேல் ரெயிலில் டிராலிகளை தள்ளிக்கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    வந்தே பாரத் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே உணவு வேண்டுமா, வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    சிலர் 'உணவு வேண்டாம்' என்று குறிப்பிட்டு விட்டு, ரெயில் பயணத்தின்போது உணவுக்கான பணத்தை செலுத்த தயாராக இருந்தபோதிலும் உணவு அளிக்க இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) ஊழியர்கள் மறுத்து விடுகின்றனர்.

    இதுதொடர்பாக பயணிகள் புகார் தெரிவித்த நிலையில், டிக்கெட் முன்பதிவின்போது உணவு வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தபோதிலும், பயணத்தின்போது பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உணவு வழங்கலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தலைவருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

    மேலும், பயணிகளுக்கு அசவுகரியத்தை தவிர்க்க இரவு 9 மணிக்கு மேல் ரெயிலில் டிராலிகளை தள்ளிக்கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×