என் மலர்
இந்தியா

செல்போனுக்கு 'சார்ஜ்' செய்து வருமானம் ஈட்டும் வாலிபர்

- சார்ஜ் போர்டை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 போன்களுக்கு சார்ஜ் செலுத்த முடியும்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரை பாராட்டி பதிவிட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். தொடர்ந்து அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு வாலிபர் செல்போன்களுக்கு 'சார்ஜ்' போடுவதன் மூலம் 1 மணி நேரத்துக்கு ரூ.1,000 வரை வருமானம் ஈட்டுவது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் செல்போன்களுக்கு 'சார்ஜ்' போட்டு தருகிறார். ஒரு பலகை முழுவதும் செல்போன்கள் நிறைந்துள்ள நிலையில், மேலும் பலர் தங்களது செல்போன்களை 'சார்ஜ்' செய்ய காத்திருக்கின்றனர். அந்த சார்ஜ் போர்டை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 போன்களுக்கு சார்ஜ் செலுத்த முடியும்.
இதற்கு அவர் தலா ரூ.50 வசூலிக்கிறார். இதன் மூலம் அந்த வாலிபர் 1 மணி நேரத்துக்கு ரூ.1,000 வரை சம்பாதிப்பதாக கூறியுள்ளார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரை பாராட்டி பதிவிட்டனர்.