என் மலர்
இந்தியா
ரூ. 1,100 அல்லது சேலைக்காக வாக்குகளை விற்க வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
- அது உங்களுடைய பணம். பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
- உங்களுடைய வாக்கு விலைமதிப்பற்றது.
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இருந்தாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது.
4-வது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் ஆம் ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக களம் இறங்கியுள்ளது.
எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக வாக்காளர்களுக்கு தங்க செயின், சேலை, ஷூ, பணம் வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜரிவால் டெல்லி மக்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-
அது உங்களுடைய பணம். பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய வாக்கை 1,100 ரூபாய் அல்லது சேலைக்காக விற்க வேண்டாம். உங்களுடைய வாக்கு விலைமதிப்பற்றது.
நம்முடைய வாக்கை வாங்க முடியும் என்றால், அதன்பின் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். பணக்காரர்கள் மட்டுமே ஆட்சி நடத்த முடியும். யாருக்கும் வாக்களியுங்கள். ஆனால் பணம் வழங்குபவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.