என் மலர்
செய்திகள்
X
டி.என்.பி.எல்.: திருவள்ளூர் - மதுரை இன்று பலப்பரீட்சை
Byமாலை மலர்8 Aug 2017 3:00 PM IST (Updated: 8 Aug 2017 3:00 PM IST)
இரண்டாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், திருவள்ளூர் வீரன்ஸ் - மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் இன்று நெல்லையில் மோதுகிறது.
நெல்லை:
தமிழ்நாடு பிரிமீயர்‘லீக்’ போட்டியில் 21-வது ‘லீக்’ஆட்டம் நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அபராஜித் தலைமையிலான திருவள்ளூர் வீரன்ஸ் - அருண் கார்த்திக் தலைமையிலான மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
திருவள்ளூர் வீரன்ஸ் 5 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு உள்ளது.
மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. கடந்த டி.என்.பி.எல். போட்டியில் மதுரை அணி தான் மோதிய 7 ஆட்டத்திலும் தோற்றது. தற்போது 4 போட்டியில் தோற்றுள்ளது. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×
X