என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை முதல் சாம்பியன்ஸ் டிராபி வரை.. தொடர்ந்து 15 முறையாக டாசில் தோற்ற இந்திய அணி

- 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி டாசில் தோற்றது.
- தற்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியிலும் இந்திய அணி டாசில் தோற்றது
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 15 முறை டாசில் தோற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
2023-ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டி முதல் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 12 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக அதிக முறை டாசில் தோற்ற கேப்டன்கள்:
இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா - 12 (நவம்பர் 2023 - மார்ச் 2025)
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா - 12 (அக். 1998 - மே 1999)
நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் - 11 (மார்ச் 2011 - ஆகஸ்ட் 2013)