search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அடிலெய்டு டெஸ்ட்: டின்னர் இடைவேளை வரை இந்தியா 82/4
    X

    அடிலெய்டு டெஸ்ட்: டின்னர் இடைவேளை வரை இந்தியா 82/4

    • ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
    • விராட் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று காலை (இந்திய நேரப்படி 9.30) தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சுப்மன் கில், ரோகித் சர்மா, அஸ்வின் சேர்க்கப்பட்டு ஜூரெல், படிக்கல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டனர்.

    ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கே.எல். ராகுல் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். சுப்மன் களம் இறங்கியதில் இருந்து அடித்து விளையாடினார். கே.எல். ராகுல் முதலில் நிதானமாக விளையாடினார். அதன்பின் அடித்து விளையாட தொடங்கினார்.

    இந்த ஜோடி சிறப்பாக விளையாடிய நிலையில் இந்தியா 69 ரன் எடுத்திருக்கும்போது கே.எல். ராகுல் (37) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 7 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்த இரண்டு விக்கெட்டையும் ஸ்டார்க் வீழ்த்தினார்.

    மறுமுனையில் விளையாடிய சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் இந்தியா 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 23 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருக்கும்போது டின்னர் இடைவேளை விடப்பட்டது.

    ரிஷப் பண்ட் 4 ரன்னுடனும், ரோகித் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய 69 ரன்னிற்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்து 81 ரன்னுக்குள் 4 விக்கெட் இழந்தது. அதாவது 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    Next Story
    ×