என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவை இந்த அளவில் இங்கிலாந்து வீழ்த்தினால் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு

- இங்கிலாந்தை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
- இங்கிலாந்து அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி
விட்டனர். பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக முன்னேறி விட்டது. 2-வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா அணி முன்னேற அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.
'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். 3 புள்ளியுடன் உள்ள தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் சிக்கலின்றி அரைஇறுதிக்கு முன்னேறும். சறுக்கினாலும் மோசமாக தோற்கக்கூடாது. ரன்ரேட் குறையாமல் இருந்தால் போதும்.
ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 300 ரன்கள் எடுத்தால், தென் ஆப்பிரிக்காவை குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இரண்டாவது பேட்டிங் செய்தால், 11.1 ஓவர்களுக்குள் 300+ இலக்கை துரத்த வேண்டும். இந்த அதியசம் நடந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளது.
ஆனால் இங்கிலாந்தை வீழ்த்தி 5 புள்ளியுடன் தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பதில் தீவிரம் காட்டும். ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. கேப்டனாக ஜோஸ் பட்லரின் கடைசி ஆட்டம் இது என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிப்பார்.