search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விளையாடனும்...! கே.எல். ராகுல் விசயத்தில் U-Turn அடித்த அணி நிர்வாகம்
    X

    விளையாடனும்...! கே.எல். ராகுல் விசயத்தில் U-Turn அடித்த அணி நிர்வாகம்

    • ஆஸ்திரேலியா தொடரில் குறிப்பிடத்தகுந்த வகையில் ரன்கள் சேர்த்தார்.
    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு கேட்ட நிலையில் முதலில் அணி நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததாக தகவல்.

    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். இதனால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பணியுடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 எனத் தொடரை இழந்தது.

    இந்த தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய கே.எல். ராகுல் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தார்.

    இந்தியா அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

    டி20 போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் இல்லை எனக் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கே.எல். ராகுலை தேர்வு செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஆனால் தனக்கு ஓய்வு வேண்டும் என அணி நிர்வாகத்திடம் கே.எல். ராகுல் வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கே.எல். ராகுலுக்கு அணி ஓய்வு அளிக்க முடிவு செய்திருந்தது.

    இந்த நிலையில் அணி நிர்வாகம் தன்னுடைய முடிவை தற்போது மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இங்கிலாந்து தொடர் இருக்கும் என்பதால் கட்டாயம் விளையாட வேண்டும் என அணி நிர்வாகம் கே.எல். ராகுலிடம் கறாராக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பிடிக்க கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    Next Story
    ×