என் மலர்
கிரிக்கெட் (Cricket)
VIDEO: சுப்மன் கில்லின் ODI ஆவரேஜ் 58.. யூடியூப் லைவில் டக்குனு டென்ஷன் ஆன அஷ்வின்
- சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அழிப்பது நியாயமே இல்லை என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
- எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
அதே சமயம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி குறித்து அஷ்வின் தனது யூடியூப் சானலில் நேரலையில் பிரபல கிரிக்கெட் வல்லுநர் Pdogg என்று அழைக்கப்படும் பிரசன்ன அகோரம் உடன் உரையாற்றினார்.
அப்போது நேரலையில் ரசிகர் ஒருவர் "Pdogg தன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்யவில்லை என்பதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று அஷ்வினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த அஷ்வின், "டேய் உன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி அணியில் சுப்மன் கில்லை எடுக்கவில்லையா? என கேட்க Pdogg இல்லை என்று சைகை காட்டுகிறார். உடனே அஷ்வின் இல்ல எனக்கு புரியல என்று கேட்க, அதற்கு Pdogg ஹானஸ்ட் ராஜ் என்று எப்படி என்னை எல்லாரும் கூப்பிடுவார்கள் நியாயமா இருந்தா தானே கூப்பிடுவாங்க என்று சொல்ல, அதற்கு அஷ்வின், ஒருநாள் கிரிக்கெட்டில் கில் 58 ஆவரேஜ் வைத்துள்ளான். சும்மா பாப்புலர் கருத்துன்னு உன்னோட அணியில் இருந்து அவனை எடுத்துவிட்டியா?" என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
*tha Ash na got no chill! ????? pic.twitter.com/UeGDeBnvsX
— Video Memes (@VideoMemes_VM) January 23, 2025