என் மலர்
கிரிக்கெட் (Cricket)
உறவே என் ஆசை உறவே.. லப்பர் பந்து பட பாடலுடன் அஸ்வின் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
- அஸ்வின் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- உறவே என் ஆசை உறவே என்ற பாடலை வைத்து வீடியோவை ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 3 டெஸ்ட் போடிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
இந்த போட்டியுடன் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக கொண்ட லப்பர் பந்து படத்தில் இடம் பெற்ற உறவே என் ஆசை உறவே என்ற பாடலை வைத்து வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் கட்டியணைத்தது மட்டுமின்றி பயிற்சி செய்யும் வீடியோவும் இடம் பெற்றுள்ளது. மேலும் ரகானே, புஜாரா ஆகியோரும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The love we give away is the only love we keep. ???? pic.twitter.com/kfkGjGfNE7
— Ashwin ?? (@ashwinravi99) December 18, 2024
லப்பர் பந்து படம் வெளியாகிய போது இந்த படத்தை அஸ்வின் புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.