என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பார்டர்- கவாஸ்கர் டிராபி: 50-50 வாய்ப்பு என்கிறார் கம்மின்ஸ்
- ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு தொடர்களில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை.
- இது மிகவும் நிண்ட இடைவெளி காலம் ஆகும். இந்த முறை இதை மாற்றுவோம்.
இந்தியா ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இரண்டு முறை விளையாடியுள்ளது. இரண்டு முறையும் தோல்வியை சந்தித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து இந்தியா இன்னும் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் உள்ளது. இந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது.
வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும் நிலையில், ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.
ஏற்கனவே இதற்கு முன்னதாக இரண்டு தொடர்களை ஆஸ்திரேலியா மண்ணில் அடுத்தடுத்து வென்றுள்ளது. இந்த முறை தொடரை கைப்பற்றினால் 3-வது முறையாக, அதுவும் ஹாட்ரிக் ஆகும்.
ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியாதான் வெற்றி பெறும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் பார்டர்- கவாஸ்கர் டிராபிக்கான வாய்ப்பு 50-50 எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறுகையில் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடுநிலையான கண்டிசனில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் நிச்சயமாக நாங்கள் முன்னிலை பெற்றுள்ளோம். இரு அணிகளுக்கு இடையிலான தொடரின்போது எப்போதும் கடும் போட்டி நிலவும். நான் இந்த தொடரை வெல்வதற்கான வாய்ப்பை 50-50 என கருதுகிறேன். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 10-க்கும் 10-ல் டிக் ஆக ஆர்வமாக உள்ளேன்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு தொடர்களில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை. இது மிகவும் நிண்ட இடைவெளி காலம் ஆகும். இந்த முறை இதை மாற்றுவோம். நீண்ட காலம் எங்களுக்கு எதிராக விளையாடி அவர்கள் எங்களை வீழ்த்தியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதிராக நாங்கள் ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதில் இருந்து நாங்கள் நம்பிக்கை பெறுவோம் " என்றார்.