search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா
    X

    3வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா

    • இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
    • மழை காரணமாக போட்டி தடைப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி காபாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மழை காரணமாக போட்டி பலமுறை தடைப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆகி இருந்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இடையில், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ஆகியோர் விக்கெட்டை பறிக்கொடுக்காமல் ஆடி வந்தனர். எனினும், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க போராடியது. இந்த நிலையில், களத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இதனால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க முடிந்தது. இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆகாஷ் தீப் 31 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களை சேர்த்துள்ளது. ஸ்கோர் அடிப்படையில் இந்திய அணி 185 பின்னணியில் உள்ள நிலையில், மழை காரணமாக போட்டி தடைப்பட்டுள்ளது.

    Next Story
    ×