search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    5வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    5வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்

    • இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
    • இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 40 ரன்களை அடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விலகியதை அடுத்து, ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார். அதன்படி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. துவக்கத்திலேயே இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுப்மன் கில் 64 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களை எடுத்தும், விராட் கோலி 69 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் சற்று நிலைத்து நின்று ஆடினார்.

    இவர் 98 பந்துகளில் 40 ரன்களை அடித்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 95 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். நிதிஷ் குமார் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார். வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களிலும் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×