என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பும்ராவை எதிர் கொள்ள திட்டம் ரெடி... ஆஸ்திரேலிய புது தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ்
- ஆஸ்திரேலியா தொடதில் மெக்ஸ்வீனியை பும்ரா 5 இன்னிங்சில் 4 முறை அவுட்டாக்கியுள்ளார்.
- இதனால் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளது.
இந்த நிலையில் 4-வது போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரரான நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ்.
இவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து கூறும்போது "நான் பும்ராவுக்கு எதிராக திட்டம் வைத்துள்ளேன். ஆனால் அதை தற்போது என்னவென்று சொல்ல மாட்டேன். பந்து வீச்சாளர்களை கடும் நெருக்கடிக்குள் கொண்டு வர முயற்சிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியாவில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இரண்டு முறையும் பும்ரா பந்து வீசு்சை சாம் கான்ஸ்டான்ஸ் எதிர்கொள்ளவில்லை.
இது தொடர்பாக கூறுகையில் "எல்லோரும் ரொம்ப நல்ல பந்து வீச்சாளர்கள். உலகத்தரம் வாய்ந்தவர்கள். அந்த சவாலை அனுபவித்து விளையாட காத்திருக்கிறேன்" என்றார்.
மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா 5 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளது. இதில் நான்கு முறை நாதன் மெக்ஸ்வீனியை பும்ரா அவுட்டாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.