என் மலர்
கிரிக்கெட் (Cricket)
4-வது டெஸ்ட்டில் மூன்று மாற்றங்கள்: மீண்டும் தொடக்க வீரராக ரோகித்- வெளியான தகவல்
- 4-வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் களமிறங்க உள்ளார்.
- கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 295 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், அடிலெய்டு வில் பகல்-இரவாக நடை பெற்ற 2-வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் டிரா ஆனது.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 -வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை ( 26- ந் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தொடக்க வீரராக விளையாடி வந்த கேஎல் ராகுல் 3-வது இடத்தில் களமிறங்க உள்ளார். அதேபோல 5-வது இடத்தில் விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
மேலும் இந்த போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. அதன்படி 3-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் 4-வது டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம்பெறுவார். அதேபோல தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இந்த போட்டியில் களமிறங்க உள்ளார். நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முன்னேற கடைசி 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.