search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    bcci ipl 2023
    X

    ஐபிஎல் 2023 தொடரில் ரூ.5,120 கோடி கூடுதல் வருவாய் ஈட்டிய பிசிசிஐ

    • ஐபிஎல் 2022 தொடரின் மூலம் பிசிசிஐ ரூ.6,404.25 கோடி வருவாய் ஈட்டியது.
    • ஐபிஎல் 2023 தொடரின் மூலம் பிசிசிஐ ரூ.11,769 கோடி வருவாய் ஈட்டியது.

    ஐபிஎல் 2023 தொடரின் மூலம் பிசிசிஐ ரூ.11,769 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஐபிஎல் 2022 தொடரில் ரூ.6,404.25 கோடி வருவாய் கிடைத்த நிலையில், 2023 ஆம் ஆண்டு வருவாய் 116% அதிகரித்துள்ளது.

    அதாவது ஐபிஎல் 2023 தொடரில் முந்தைய ஆண்டை விட ரூ.5,120 கோடி கூடுதல் வருவாயை பிசிசிஐ ஈட்டியுள்ளது.

    ஐபிஎல் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் செலவும் ரூ.6,648 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை விட 66% அதிகமாகும்.

    2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் ரூ.48,390 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதில் ஐபிஎல் தொலைக்காட்சி உரிமையை டிஸ்னி ஸ்டார் ரூ.23,575 கோடிக்கு வாங்கியது. டிஜிட்டல் உரிமையை ஜியோசினிமா ரூ.23,758 கோடிக்கு பெற்றுள்ளது.

    ஐபிஎல் 2023ல் பிசிசிஐயின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் வருவாய் ரூ.8,744 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய தொடரில் இந்த வருவாய் ரூ.3,780 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×