search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணா
    X

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணா

    • ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.
    • பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)

    இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குறைந்தது முதல் 2 போட்டிகளில் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

    பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×