search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டோனி இல்லை... கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பினிஷர் விராட் கோலி- ஆண்டர்சன்
    X

    டோனி இல்லை... கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பினிஷர் விராட் கோலி- ஆண்டர்சன்

    • 50 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் பிரமிப்பானவை.
    • வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் கோலியே விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம், வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் (பினிஷர்) கில்லாடி யார் என்று கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், 'இலக்கை விரட்டிப்பிடிப்பதில் (சேசிங்) இந்திய வீரர் விராட் கோலியை விட வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. குறிப்பாக 50 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் பிரமிப்பானவை.

    2-வது பேட்டிங்கின் போது அவர் அதிகமான சதங்களை (27 சதம்) அடித்துள்ளார். அத்துடன் அத்தகைய சூழலில் அவரது மனஉறுதியும், தன்னம்பிக்கையும் உயர்வாக இருக்கிறது. 1990-களின் இறுதி மற்றும் 2000-களில் சிறந்த பினிஷராக ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் திகழ்ந்தார்.

    அவர் 6-வது வரிசையில் இறங்கி அந்த பணியை செய்தார். பெரும்பாலும் அவர் 50, 60 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடிப்பார். ஆனால் கோலி 3-வது வரிசையில் களம் கண்டு நீண்ட நேரம் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடித்து அணியை கரைசேர்ப்பார். உண்மையை சொல்வது என்றால் வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் கோலியே விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை என ஆண்டர்சன் கூறினார்.

    Next Story
    ×