என் மலர்
கிரிக்கெட் (Cricket)

குல்தீப் தான் சிறந்த ரிஸ்ட் ஸ்பின் பவுலர்.. கம்பேக் குறித்து மனம் திறந்து பேசிய சாஹல்

- குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
- குல்தீப்புக்கும் எனக்கும் ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கடைசியாக 2023 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன்பின்பு அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பது குறித்து சாஹல் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த சாஹல், " இந்திய அணி நான் கம்பேக் கொடுப்பது எனது கையில் இல்லை. குல்தீப் தான் தற்போது உலகின் சிறந்த ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பந்துவீச்சைப் பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்கு ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.
சாஹலும் குல்தீப்பும் ஒன்றாக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஐபிஎல் 2025 சீசனில் குல்தீப் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடுகிறார். சாஹல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.