search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி: தொடக்க விழாவில் பங்கேற்கும் ரோகித்? வெளியான தகவல்
    X

    பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி: தொடக்க விழாவில் பங்கேற்கும் ரோகித்? வெளியான தகவல்

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.
    • தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதேசமயம் 6 அணிகள் அறிவிக்கபட்ட நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போதுவரை அறிவிக்கபடவில்லை. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த நிகழ்வில் பங்கேற்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய அணி கேப்டன் பாகிஸ்தான் செல்லவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு மெகா சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், பிசிபி பிரமாண்டமான நிகழ்வைத் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

    Next Story
    ×