search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபியை தட்டிப்பறிக்குமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்
    X

    சாம்பியன்ஸ் டிராபியை தட்டிப்பறிக்குமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்

    • இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா?

    சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    எனினும், ஐ.சி.சி. இறுதிப் போட்டி என்பதால் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதை முனைப்பில் இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 2 பந்துகள் மீதிமிருந்த நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    அந்த வகையில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்றைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் நேரலையில் காணலாம்.

    Next Story
    ×