என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
By
மாலை மலர்28 Feb 2025 2:08 PM IST

- ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
- பி பிரிவில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற் றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் தொடரில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேற்றப்பட்டன. பி பிரிவில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.
இந்நிலையில், இந்த தொடரின் 10-வது லீக் ஆட்டம் லாகூரில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது போல் ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
X