என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 179 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து

- இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோரூட் 37 ரன்கள் எடுத்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட், டக்கெட் களமிறங்கினர். தொடக்கமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சால்ட் 8 ரன்னிலும் ஸ்மித் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டக்கெட் 24 ரன்னிலும் ஹரி ப்ரூக் 19 ரன்னிலும் ரூட் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 9, ஓவர்டேன் 11, ஆர்ச்சர் 25, பட்லர் 21 என வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.