என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இப்போட்டியில் விளையாடுகிறார்.