search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    Virat Kohli
    X

    பயிற்சியின் போது கலாய்த்த ரசிகர்கள் - கோலியின் ரியாக்ஷன் இதுதான்.. வீடியோ வைரல்

    • நாளை தொடங்கும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடந்த செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியை சூப்பர் ஓவரில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை தொடங்கும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விராட் கோலியை இலங்கை ரசிகர்கள் கேலி செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. பயிற்சில் ஈடுபட்ட கோலியை பார்த்து ரசிகர்கள்'சோக்லி சோக்லி' என்று அழைத்ததும், அதற்கு அவர் கோபமடைந்த சம்பவம் அரங்கேறியது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ரசிகர் ஒருவர் கோலியை 'சோக்லி சோக்லி' என்று அழைப்பதும் இதனால் வருத்தமடையும் கோலி, அந்த ரசிகரை பார்த்து 'இங்கே இல்லை' என்று கூறுகிறார்.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×