என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாக்.-க்கு எதிரான போட்டி.. ஹர்திக் அணிந்திருந்த வாட்ச்-இன் விலை ரூ. 7 கோடி- என்ன ஸ்பெஷல்?

- முதல் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார்.
- வாட்ச்-இன் விலை 8 லட்சம் டாலர்கள் என்று தகவல்.
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார்.
நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 8 ஓவர்கள் பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 31 ரன்களை மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு பேட்டிங்கின் போது பாண்ட்யா 6 பந்துகளில் 8 ரன் எடுத்த அவுட் ஆனார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. அதன்படி ஹர்திக் பாண்டயா நேற்றைய போட்டியின் போது அணிந்திருந்த வாட்ச்-இன் விலை 8 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6.92 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
உலகளவில் மிகவும் பெயர்பெற்ற அந்த வாட்ச்-ஐ காண்பது அரிது. இந்த வாட்ச் உண்மையில் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்காக உருவாக்கப்பட்டது. இந்த வாட்ச் மொத்தத்தில் 50 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஆடம்பர வாட்ச் தவிர்த்து நேற்றைய போட்டியில் வைத்து ஹர்திக் பாண்ட்யா சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை கடந்தார்.