search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இன்னும் போதைப்பொருள் எடுக்கிறீர்களா? என கேட்ட தமிம் இக்பால்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட அலெக்ஸ் ஹேல்ஸ்
    X

    இன்னும் போதைப்பொருள் எடுக்கிறீர்களா? என கேட்ட தமிம் இக்பால்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட அலெக்ஸ் ஹேல்ஸ்

    • தமீம் இக்பால் வங்கதேச அணியில் இருந்து ஓய்வு பெற்று டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.
    • அலெக்ஸ் ஹேல்ஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக தடைக்கு உள்ளானவர்.

    வங்கதேசத்தில் வங்கதேசம் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டி ஒன்றில் ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் ரங்க்பூர் ரைடர்ன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பின் வீரர்களை கைக்கொடுப்பார்கள். அப்போது தமீம் இக்பால் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கைக்கொடுக்கும்போது இன்னும் போதைப்பொருள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த ஹேல்ஸ் தமீம் இக்பாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்ற இருவரும் கைகலப்பில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. இரண்டு அணி வீரர்களும் அவர்களை பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் கைலகப்பு தவிர்க்கப்பட்டது.

    வங்கதேச அணியில் இருந்து ஓய்வு பெற்ற தமீம் இக்பால் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் பார்ச்சூன் பரிசால் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் தடை செய்யப்பட்டிருந்தார். இதை மனதில் வைத்துதான் தமீம் இக்பால் இவ்வாறு கேட்டுள்ளார்.

    Next Story
    ×