search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தி நமது தேசிய மொழி அல்ல - பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் பேச்சு
    X

    இந்தி நமது தேசிய மொழி அல்ல - பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் பேச்சு

    • தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும் தான் என்று அஸ்வின் தெரிவித்தார்.

    சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பட்டமளிப்பு விழாவில் பேசிய அஸ்வின், 'ஆங்கில மாணவர்கள் யார் எல்லாம் இருக்கிறீர்கள், தமிழ் மாணவர்கள் யாரெல்லாம் இருக்கிறீர்கள்' என கேட்க தமிழ் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் 'இந்தி மாணவர்கள் யார் எல்லாம் இருக்கிறீர்கள்' என்று அஸ்வின் கேட்க மாணவர்கள் அனைவரும் அமைதியானார்கள்.

    இதனையடுத்து பேசிய அஸ்வின், "இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும் தான்" என்று தெரிவித்தார்.

    இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×