என் மலர்
கிரிக்கெட் (Cricket)
4-வது போட்டி தோல்வி அல்லது டிராவில் முடிந்தால்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தகுதிபெறுவது எப்படி?
- மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
- தொடரானது சமனில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்திருந்தது. நிதிஷ் 105 ரன்னிலும் சிராஜ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்னும் இந்திய அணி 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் அல்லது போட்டி டிரா ஆகும் பட்சத்தில் உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி 3-வது மற்றும் 4-வது போட்டிகளில் வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. இதன் காரணமாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணி 4-வது போட்டியில் தோல்வியடைந்து 5-வது போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு கணக்கில் சமநிலையில் முடியும். அப்படி நடந்தால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 55.26 ஆக இருக்கும்.
ஒருவேளை இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல தகுதி பெறாது. இரண்டிலும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிடும்.
இந்த தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் போதும்.
சமநிலையில் அப்படி இல்லையெனில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும். இப்படி இந்திய அணி மற்ற அணிகளின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.