search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட்டில் 10 ஆயிரம் ரன்கள் குவிக்க காரணம் இம்ரான்கான்- சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த கவாஸ்கர்
    X

    டெஸ்ட்டில் 10 ஆயிரம் ரன்கள் குவிக்க காரணம் இம்ரான்கான்- சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த கவாஸ்கர்

    • டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்னை முதன் முதலில் எடுத்தது அற்புதமான உணர்வாகும்.
    • கவாஸ்கர் இல்லாத இந்தியாவை வீழ்த்த விரும்பவில்லை என்று இம்ரான் கூறினார்.

    புதுடெல்லி:

    டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் 10 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தவர் சுனில் கவாஸ்கர். 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டெஸ்டில் அவர் இந்த மைல்கல்லை தொட்டார்.

    கவாஸ்கருக்கு பிறகு 14 வீரர்கள் 10 ஆயிரம் ரன்னை எடுத்தார்கள். டெண்டுல்கர் (15,921 ரன்), ரிக்கி பாண்டிங் (13,378), காலிஸ் (13,289), ராகுல் டிராவிட் (13,288), ஜோரூட் (12,972), குக் (12,472), சங்ககரா (12,400), லாரா (11,953), சந்தர்பால் (11,867), ஜெய வர்த்தனே (11,814), ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,271) யூனுஸ்கான் (10,099) ஆகியோர் 10 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் ஆவார்கள்.

    கவாஸ்கர் 1971 முதல் 1987 வரையிலான காலக் கட்டத்தில் விளையாடி 10,122 ரன் (125 டெஸ்ட்)எடுத்தார். டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் அவர் 14-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் 10 ஆயிரம் ரன் சாதனையை தான் எடுப்பதற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் தான் காரணம் என்று தற்போது டெலிவிசன் வர்ணனையாளராக இருக்கும் கவாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்னை முதன் முதலில் எடுத்தது அற்புதமான உணர்வாகும். கிரிக்கெட்டை தொடங்கியபோது இதை சாதிப்பேன் என்று நினைக்கவில்லை. நான் இந்த மைல்கல்லை தொட முடிந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் இம்ரான்கான் தான்.

    பாகிஸ்தான் இங்கு வருவதற்கு முன்பாக இங்கிலாந்தில் நானும், இம்ரான்கானும் உணவு விடுதிக்குச் சென்றோம். அப்போது , இந்தத் தொடர்தான் எனக்கு கடைசி தொடர், ஓய்வு அறிவிக்கப்போகிறேன் என்றேன். இதை சொல்லும் போது 1986-ம் ஆண்டாகும். ஆனால், இம்ரான் இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

    பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவை இந்திய மண்ணில் நீங்கள் களத்தில் இருக்கும்போது வீழ்த்த வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதாவது கவாஸ்கர் இல்லாத இந்தியாவை வீழ்த்த விரும்பவில்லை என்று இம்ரான் கூறினார்.

    இம்ரான் சொன்னது போலவே அறிவிப்பு வந்தது. அப்படி அறிவிப்பு வராமல் நான் அந்தத் தொடரில் ஓய்வு பெற்று இருந்தால் நான் 9200-300 ரன்களில் தான் முடிந்திருப்பேன். அதனால்தான் 10 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை எட்ட முடிந்தது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

    Next Story
    ×