என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள்... ஸ்மிருதி மந்தனாவை கவுரவித்த ஆர்சிபி அணி
- பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்
- மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஸ்மிருதி மந்தனா விளையாடி வருகிறார்
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
315 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 26.2 ஓவர்கள் முடிவில் 103 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
Smriti Mandhana is having an outstanding 2024 ? pic.twitter.com/l4e8dCZneQ
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 22, 2024
இப்போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் இந்த சாதனையை பாராட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அப்புகைப்படத்தில் , 'மகாராணி' போல இருக்கும் ஸ்மிருதி மந்தனா அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் வகையில் எடிட் செய்துள்ளனர்.
மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஸ்மிருதி மந்தனா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Smriti owns the throne. ?? 12th Man Army, how many more runs do you think she'll add to her year end tally? ?@mandhana_smriti | #PlayBold #ನಮ್ಮRCB #INDvWI pic.twitter.com/YNE8Tvjgbu
— Royal Challengers Bengaluru (@RCBTweets) December 22, 2024